இமானை போன் போட்டு மிரட்டிய SK.. மொத்த உண்மையையும் சிங்கிள் டேக்கில் போட்டு உடைத்த வலைப்பேச்சு

Sivakarthikeyan: சினிமா சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை வெளிப்படையாக சொல்ல கூடிய சேனல் தான் வலை பேச்சு.சமீபத்தில் இவர்கள் யோகி பாபு பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த இருந்தது. கடந்த வாரத்தில் வலைப்பேச்சு சேனல் பிஸ்மி மக்களிடையே கலந்துரையாடினார்.

மக்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர், நான் சிவகார்த்திகேயனின் ரசிகன், நீங்கள் இமானின் விஷயத்தில் சிவகார்த்திகேயனை பற்றி சொன்ன விஷயம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.

எதனால் நீங்கள் சிவகார்த்திகேயன் மீது அப்படி ஒரு விமர்சனத்தை வைத்தீர்கள் என கேட்டிருந்தார். அந்த ஒரு கேள்விக்கு சிங்கிள் டேக்கில் இமான் மற்றும் சிவகார்த்திகேயனுக்குள் நடந்த அத்தனை விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டார்.

இசையமைப்பாளர் இமான் ஆரம்ப காலகட்டத்தில் சிவகார்த்திகேயனின் எல்லா படங்களுக்கும் இசையமைத்து வந்தார். அதன் பின்னர் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியவே இல்லை.

மொத்த உண்மையையும் சிங்கிள் டேக்கில் போட்டு உடைத்த வலைப்பேச்சு

பேட்டி ஒன்றில் இமானிடம் இனி சிவகார்த்திகேயனுடன் இணைந்து எப்போது பணியாற்றுவார்கள் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு இமான் சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது துரோகம், அவருடன் இனி நான் பணியாற்ற வாய்ப்பே இல்லை என சொல்லி இருந்தார்.

ஏற்கனவே இமான் அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் சிவகார்த்திகேயன் தான் காரணம் என சலசலக்கப்பட்டது. இமானின் இந்த பேட்டிக்கு பிறகு மொத்தமாக இந்த விஷயம் ஊர்ஜிதமானது.

அந்த சமயத்தில் இமான் கொடுத்த அந்த இன்டர்வியூ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகாதவாறு சிவகார்த்திகேயன் தன்னுடைய கைக்கூலிகளை வைத்து வேலை பார்த்ததாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் வேலை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், அவரைப் பற்றி சிலர் நல்ல விதமாக பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருந்தது.

மேலும் மூன்றாவது குழந்தையையும் பெற்றெடுத்து தான் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதை மக்களுக்கு தெரிவித்தார் சிவகார்த்திகேயன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிஸ்மி அந்த ரசிகரியிடம் இமான் பேட்டி கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் அவரை போன் போட்டு மிரட்டியதாக சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் மிரட்டுவது வேலைக்காகவில்லை என தெரிந்ததும் ரொம்பவும் கெஞ்சியும் பேசி இருக்கிறார்.

இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் மீது தான் தப்பு இருக்கிறது. அது எங்களுக்கு தெரியும். அதனால் இந்த விஷயத்தில் எப்போதுமே வலைப்பேச்சு சேனலின் ஆதரவு இசையமைப்பாளர் இமானுக்கு தான் என பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News