Videos | வீடியோக்கள்
டபுள் மாஸாக வெளியான நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் வக்கீல்சாப்.. அஜித் போல் பட்டையை கிளப்பும் பவன் கல்யாண்
Published on
அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெண்களுக்கான படமாக உருவாகியிருந்த நேர்கொண்ட பார்வை படம் தற்போது தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் தெலுங்கில் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி போன்றோர் நடித்துள்ளனர். தற்போது வக்கீல்சாப் படத்தின் டிரைலர் இணையத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது கூடுதல் தகவல்.
