fbpx
Connect with us

முத்துராமலிங்கத் தேவருக்கு புகழாரம் சூட்டிய கவிஞர் வைரமுத்து.. வைரலாகும் பதிவு!

vairamuthu-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

முத்துராமலிங்கத் தேவருக்கு புகழாரம் சூட்டிய கவிஞர் வைரமுத்து.. வைரலாகும் பதிவு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58 வது குருபூஜை விழா மற்றும் 113 வது ஜெயந்தி விழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய பல அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தேவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவியரசு வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் அந்த பதிவில் அவர், ‘கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கை கூப்பித் தொழுகிறேன்’ என்று தேவர் ஜெயந்தியை குறித்து அழகான வார்த்தைகளை கவிதையாய் கோர்த்து ட்வீட் போட்டு தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இவ்வாறு கவியரசு வைரமுத்து அவருடைய பாஷையிலேயே தேவருக்கு மரியாதையை செலுத்தி இருப்பதைப் பார்த்த பலர், இந்த பதிவை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

vairamuthu

vairamuthu

Continue Reading
To Top