புத்தாண்டை முன்னிட்டு பலரும் சொகுசு பார்ட்டிகளுக்கு செல்லும் வேலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசில் பார்ட்டி தொடங்கினார். அவரது ரசிகர்களின் பல வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன் அரசியல் திட்டம் பற்றி நேற்று அறிவித்தார்.

rajni

இந்தநிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து பேசினார்.

‘ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து, அவரின் நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஊடகங்களில் ரஜினிக்கு வாழ்த்துகளும், வசைமொழிகளும் குவிந்துவருவதைக் கண்டேன். வாழ்த்துவதற்கும், வசைபாடுவதற்கும் போதுமான கால அவகாசத்தை ரஜினிக்குக் கொடுக்கவில்லை என்பது என் எண்ணம். வாழ்த்துகிறவர்களெல்லாம், அவரை நாளை வசைபாடலாம். வசைபாடுகிறவர்கள், நாளை வாழ்த்தலாம். இந்த கருத்துகள் இடமாற்றத்துக்கு கொஞ்சம் கால அவசகாசம் தேவைப்படும்.

Vairamuthu

நாற்பதாண்டு காலம் கலைத்துறையில் நீங்கள் செலுத்திய உழைப்பைப் போல, இரு மடங்கு உழைப்பை இந்த அரசியல் வெளிக்கு நீங்கள் தரவேண்டி இருக்கும் என்று தொலைபேசியில் ரஜினியைத் தொடர்புகொண்டு சொன்னேன்.

rajini

ரஜினி முன்பாக 3 பிரச்னைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன். முதலில் தனது எதிரி அல்லது எந்த கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். நண்பன் யார் என்று பின்னர் கூட முடிவு செய்யலாம். ஆனால், எதிரியை முதலாவதாக முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சாதிக்க முடியாததை, தான் எப்படி சாதித்துக் காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்தக் கொள்கை விளக்கம் என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தீர்மானித்து, தமிழக மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும். சொல்லப்போனால், தலைவன் மற்றும் கலைஞன் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியை இந்த கொள்கைதான் இட்டு நிரப்பும் என்று நான் நம்புகிறேன். மூன்றாவது, கொள்கை என்று ஒன்று அறிவிக்கப்பட்டால், அதைக் கொண்டுசெலுத்துவதற்கு, அதை அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும், சிறந்த செயல்வீரர்களும் ஒரு இயக்கத்துக்கு தேவை. இந்த மூன்றும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்கள்’ என்றார்.