fbpx
Connect with us

Cinemapettai

கலைஞர் எழுதிய பேனா .. வைத்து .. எழுதிய கவிதை – கவிப்பேரரசு வைரமுத்து !

Politics | அரசியல்

கலைஞர் எழுதிய பேனா .. வைத்து .. எழுதிய கவிதை – கவிப்பேரரசு வைரமுத்து !

முத்தமிழின் மூத்த மகன் , ஐயா கலைஞரின் மறைவுக்கு தமிழகம் மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியாவும் வருந்தி வருகின்றது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்…

என் பிறந்தநாளை ஒட்டிக் கலைஞரிடம் அவர் எழுதிய பேனாவைப் பரிசாகப் பெற்றேன். என் வாழ்நாளின் பெரும்பரிசு என்று பெருமையுற்றேன்.

அதே பேனாவில் எழுதிய கவிதை இது :

கண்ணிலே குடியிருக்கும்
கலைஞரே! கொஞ்ச நாளாய்ச்
சின்னதாய் எனக்கோர் ஆசை
செவிசாய்த்தே அருள வேண்டும்
பொன்பொருள் வேண்டாம்; செல்வ
பூமியும் வேண்டாம்; வேறே
என்னதான் வேண்டும்; உங்கள்
எழுதுகோல் ஒன்று வேண்டும்

எழுதுகோல் அன்று; நாட்டின்
எழுகோடித் தமிழர் நெஞ்சை
உழுதகோல்; உரிமைச் செங்கோல்!
உழைக்கின்ற ஏழை யர்க்காய்
அழுதகோல்; இலக்கி யத்தின்
அதிசய மந்தி ரக்கோல்
தொழுதுகோல் கொண்டேன்; நீங்கள்
தொட்டகோல் துலங்கச் செய்வேன்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top