கமல் பெயரில் ஒரு நீள் கவிதை என்ற தலைப்பில், அவரைப்போலவே எழுதி ஒரு கவிதை சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் வந்தது. அதை பார்த்து கமல், அதை நான் எழுதவில்லை. எழுதியவர் மன்னிப்பு கேட்கவும் என்றார்.

இப்போது, வைரமுத்து பெயரில், யாருக்கு வேணும் இந்தியா கவிதை செம்ம சூப்பரா இருக்குன்னு சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் வந்தது. அவர் எழுதியதை போலவே இருந்ததால் வைரமுத்துவுக்கு பாராட்டு மழைதான்.


ஆனால்,வைரமுத்து இப்போது இந்த கவிதை என்னுடையது இல்லை. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை என்றுவிட்டார்.