வைரமுத்து விருது பிரச்சனையில் சின்மயிக்கு வெற்றியா?

இந்த பாலியல் விவகாரங்கள் கவிஞராக இருந்தாலும் சரி ஆளுநராக இருந்தாலும் சரி மந்திரியாக இருந்தாலும் சரி யாரையும் விடாது போலருக்கு. ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவரும் மாட்டி வருகின்றனர். இதில் வைரமுத்து மட்டும் என்ன விதிவிலக்கா? அவருக்கும் தற்பொழுது வரை சின்மயி மூலமாக பிரச்சினைகள் சுற்றிக் கொண்டுதான் வருகிறது.

பாடகி சின்மயி கொடுத்த புகாரில் வைரமுத்து சிக்கவில்லை ஆனால் அவர் பெயர் கெட்டுப்போனது. எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் குற்றச்சாட்டை மட்டுமே வைத்தார் சின்மயி. அதனால் கூட அவரை மன்னித்து விடலாம் ஆனால் சிறுவர் சிறுமிகளை துன்புறுத்துவது ஆதாரத்தை காண்பித்து புகார் அளிப்பது போன்ற குற்றங்களை மன்னிக்கவே முடியாது

கேரள அரசு வைரமுத்துவிற்கு கொடுக்க இருந்த ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்வதாக சொன்னதும் வைரமுத்து விருதுகளை திருப்பி அவர்களிடமே கொடுப்பதாக அறிவித்தார். அவருடைய கவலை என்னவென்றால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை காரணம் காட்டி இப்படி விருதுகளில் குளறுபடி செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்பதாக தெரிகிறது

இப்படி ஆதாரம் இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வைரமுத்து அல்ல முதல்வர் மீதும் கூட வைக்கலாம். அதனால் யாருக்கு என்ன லாபம்? ஒரே நோக்கம் அந்த பிரபலத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பது போல தெரிகிறது.

அப்படி இல்லை என்றால் தப்பு செய்தால் தண்டனை வேண்டும் என்ற நோக்கமாக இருந்தால் கண்டிப்பாக ஆதாரம் காட்டியோ அல்லது இந்த பிரச்சினையை மேலும் தொடர்ந்து கூறிக் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் ஒரு குற்றச்சாட்டை கூறி பிரபலமடைந்த பின் அந்த பிரச்சினையை அப்படியே விடுவது சரியல்ல.

வைரமுத்து விருது பிரச்சனையில் ரீமா கல்லிங்கள், பார்வதி என அனைவரும் குரல் எழுப்பி பிரச்சனை செய்து வந்தனர். இந்த பிரச்சனை மூலம் சின்மயிக்கு என்னமோ மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் வைரமுத்துவின் எழுத்துக்கள் அழிக்கவே முடியுமா?

vairamuthu-chinmayi
vairamuthu-chinmayi

இனி வரும் காலகட்டங்களில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் மீறி தவறுகள் நடந்தால் கண்டிப்பாக ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அப்பொழுது தான் எதிர்காலத்தில் பெண்கள் தப்பிக்க முடியும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்