fbpx
Connect with us

திமுகவை டேமேஜ் செய்த வைரமுத்து

News / செய்திகள்

திமுகவை டேமேஜ் செய்த வைரமுத்து

இன்று சென்னையில் நிகழ்ந்த முரசொழி பவள விழாவில் பலர் முரசொழி பத்திரிகை பற்றியும், அதன் பெருமைகள் பற்றியும், கலைஞர் பற்றியும், தி.மு.க பற்றியும் புகழ்ந்து பேசினர்.

அதில் வைரமுத்து பேசியது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துமளவிற்கு இருந்தது. அவர் பேசும் ஒவ்வொரு வரியிலும் கலைஞரை புகழ்கிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று அனைவருமே சிந்தித்துகொண்டிருந்தனர்.

அவர் பேசிய சில வரிகள் உங்கள் பார்வைக்கு (சிகப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை கவனித்து படியுங்கள்)

நான் பல சமயம் யோசித்ததுண்டு கலைஞர் அவர்கள் ஏன் விழா பிரியராக இருக்கிறார்? அவருக்கு ஏன் அடிக்கடி பாராட்டு விழா தேவைபடுகிறது? அவர் ஏன் அதை எதிர்பார்க்கிறார்? ஏனென்றால் அப்போதுதான் மக்களை நேருக்கு நேர் சந்திக்க முடியும் என்பதால்.

கலைஞர் அவர்கள் பணத்தினை நோக்கி பணத்திற்காக கலைத்துறைக்கு வந்தவர் என்று பலர் சொல்வார்கள். அதில் என்ன தவறு? பணம் என்பது தேவைதான். ஆனால் அவர் அதற்காக மட்டும் கலைத்துறைக்கு வரவில்லை.

ராஜீவ் காந்தி கொலையின் போது எனது வீடு, கார் அனைத்தையும் எரித்தார்கள், நான் யாருமில்லா ஒரு இடத்தில் தலைமறைவானேன், அங்கும் எனக்கு கலைஞரிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்று முரசொழி அலுவலகம் எரிந்து கிடந்ததை பார்த்து எனக்கு என் வீட்டினை எரித்தது மறந்து போனது. (ராஜிவ் கொலையை இங்கு தேவை இல்லாமல் இழுத்து தி.மு.க வுக்கு சம்பந்தம் இருப்பது போல பேசினார்)

கலைஞர் கலைத்துறையை வைத்து பங்களா வாங்கினார் இல்லை என்று சொல்லவில்லை.

மனோகரா அச்சிடப்பட்டு விற்பனையானபோது அதில் கிடைத்த பெரிய லாபத்தால் அச்சிடும் பாட்ச் தேய்ந்து போனாதாக ஊழியர்கள் சொன்னபோது மர பாட்ச்சை தூக்கிவிட்டு செம்பினால் பாட்ச் போடுங்கள் செம்பினால் பாட்ச் போடுங்கள் என்று சொன்னார். (செம்பினால் பாட்ச் போடுங்கள் என்பதை திரும்ப திரும்ப அழுத்தமாக பதிவு செய்தார்.)

நான் ஆளும் கட்சியாக இருந்தபோது இந்த கலைவாணர் அரங்கம் பற்றி கவலை கொண்டதில்லை, எதிர்கட்சியாக இருந்தபோது கலைவாணர் அரங்கம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது. ஸ்டாலின் எதிர்கட்சியை இருந்துகொண்டே கலைவாணர் அரங்கை எப்படியோ பிடித்துவிட்டார்.

இப்படி தான் பேசிய ஒவ்வொரு வரியிலும் பாராட்டுவதுபோல் பல விஷயங்களை கொட்டி தீர்த்தார் வைரமுத்து.

சினிமா பேட்டை: அவருக்கு என்ன பிரச்சனையோ பாவம்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top