Connect with us
Cinemapettai

Cinemapettai

vairamuthu-chimayi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாய்ப்பு தருகிறேன் என கூட்டிச்சென்று முத்தம் கொடுத்த வைரமுத்து.. பதறி ஓடிய சின்மயி

வைரமுத்து சின்மயி பஞ்சாயத்து இன்றைக்கு நேற்று அல்ல. பலகாலமாக தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி வருகிறார் சின்மயி. சமீபத்தில்கூட வைரமுத்து வாங்கயிருந்த விருதை கெடுத்தார்.

இவ்வளவு அழுத்தமாக சின்மயி சொல்லும் போது ஒருவேளை உண்மையிலேயே வைரமுத்து இந்த வேலையை செய்திருப்பாரா எனவும் யோசிக்க வைக்கிறது. வைரமுத்து நான் அப்படிப்பட்டவன் கிடையாது, நான் யோக்கியமானவன் என்று விரைவில் நிரூபிப்பேன் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்.

ஒருமுறை வைரமுத்து வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது தனது அம்மாவுடன் சென்றுள்ளார் சின்மயி. அப்போது அங்கே தான் வைரமுத்துவின் மனைவியும் இருந்தாராம்.

வைரமுத்து மனைவி மற்றும் சின்மயி அம்மா இருவரையும் வெளியே உட்கார வைத்துவிட்டு, உள்ளே டிஸ்கஷன் என கூறி சின்மயியை உள்ளே அழைத்துச் சென்றுள்ளார் வைரமுத்து. அப்போது திடீரென சின்மயியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டாராம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சின்மயி உடனடியாக அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி வந்து தன்னுடைய அம்மாவை கூட்டி கொண்டு வேக வேகமாக காரில் புறப்பட்டுச் சென்று விட்டாராம்.

அதன் பிறகு சிலமுறை வைரமுத்து பாடல் வாய்ப்பு தருவதாக அழைத்துள்ளார். முடிந்த வரை அவருடன் எப்போதுமே நெருக்கமாக இருக்க மாட்டேன் எனவும், முக்கியமாக அவர் தனிமையில் இருக்கும்போது அவரை சந்திக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் சின்மயி.

vairamuthu-chimayi-cinemapettai

vairamuthu-chimayi-cinemapettai

Continue Reading
To Top