Tamil Cinema News | சினிமா செய்திகள்
“வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, குனிந்து பாதாளம் பார்.. இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச்சாவுகள்” வைரமுத்து
சென்னை: இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுகள் சாவு.. வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, குனிந்து பாதாளம் பார் என கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் 80 மணி நேரத்திற்கும் மேல் பிணமாக மீட்கப்பட்டான்.அவனை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் சோகத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சுஜித் இறப்புக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ?நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம்.
மரணக்குழிக்குள் மண் விழுவதற்குள் அனைத்து குழிகளையும் மூடுக. மெழுகுவர்த்தி அணைவதற்குள் கண்ணீரை துடைத்துவிடு. வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச்சாவுகள் என கூறியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
