நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசை கவிழ்க்க திமுகவினர் செய்த சதி தான் சட்டமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும், சட்டமன்றத்தில் ஸ்டாலினும், துரைமுருகனும் வாக்கெடுப்பை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் இதுவரை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ரகசிய வாக்கெடுப்பு நடந்ததே இல்லை. அப்படி இருக்கையில் திமுகவினர் வேண்டுமென்றே ரகசிய வாக்கெடுப்பு கோரி ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஸ்டாலின் நலம் விசாரிக்க சென்றார். அதற்கு திமுக நாடகம் போடுகிறது என திமுகவுக்கு எதிராக வைகோ கருத்து தெரிவித்திருந்தார்.

கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க வைகோ சென்றார். வைகோவிற்கு திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வைகோ, சசிகலா குரூப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.