காலை 11 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆளுநருடன் வைகோ சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் தனது நீண்ட கால நண்பர் என்று வைகோ கூறிவரும் நிலையில், இவர் ஆளுநரிடம் எதைப்பற்றி பேசப்போகிறார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. யாருக்காக பேசப்போகிறார் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இருப்பினும் நாம் பயப்படும் அளவக்கு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வெளியே வந்த பின்னர் ஆளுநரைப் பார்த்தது குறித்து வைகோ இப்படித்தான் கூறக் கூடும். அதையும் நாமே கூறி விடுகிறோம்: ஆளுநர் எனது நீண்ட கால நண்பர். நட்பு பாராட்டும் வகையில் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். இதில் எந்த அரசியலும் இல்லை, அரசியலும் பேசவில்லை !