Connect with us

Cinemapettai

வைகோ ஒரு பச்சோந்தி.. சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக.. கேஎஸ் அழகிரி பகீர் புகார்

vaiko

Politics | அரசியல்

வைகோ ஒரு பச்சோந்தி.. சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக.. கேஎஸ் அழகிரி பகீர் புகார்

வைகோ ஒரு பச்சோந்தி என்றும் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

வைகோவின் அரசியல் வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதை புரிந்துகொள்வார்கள்.

18 ஆண்டுகாலம் ராஜ்யசபா உறுப்பினராக வைத்து அழகு பார்த்த திமுகவிற்கு பச்சை துரோகம் செய்தவர் வைகோ. கலைஞருக்காக உயிரை விடுவேன் என கர்ஜித்த வைகோ பலமுறை கலைஞரின் முதுகில் குத்தியிருக்கிறார்.

சுப்பிரமணிய சாமி, மோடி, அத்வானி என பாஜக தலைவர்களை தேடிப்போய் சந்திக்கிறார். தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மன்மோகன்சிங்கையும் போய் சந்தித்த பச்சோந்திதான் வைகோ.

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்தது என வைகோ பேசுகிறார். இதையேதான் மோடியும் பேசுகிறர். அமீத்ஷாவோடு சேர்ந்துகொண்டு உள்நோக்கம் கற்பிக்கிறார் வைகோ.

வைகோ துரோகத்தை பற்றி பேசுகிறார் அவர் திமுகவிலிருந்து விலக்கப்பட காரணம் என்ன என்பதை உலகமே அறியும்.

வைகோவுக்கு எதிரி காங்கிரசா? பாஜகவா என்பதைக்கூட உணராத நாகரிகமற்ற வைகோ தற்போது ராஜ்யசபா எம்.பியானதே காங்கிரசின் தயவில்தான்.

நாகரிகமற்ற வைகோவை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top