13 வயதில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை.. நயன்தாராவின் சம்பளத்தை அப்போதே வாங்கியவர்

அந்த கால தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் பேரழகியாக திகழ்ந்தவர் அந்த நடிகை . வாழ்க்கை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். ஏவி மெய்யப்ப செட்டியார் இவரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தி திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த வாழ்க்கை திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதன் மூலம் வைஜயந்திமாலா ஹிந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்தப் படத்தில் அவர் அறிமுகமாகும் போது அவருடைய வயது வெறும் 13 மட்டுமே.

இவ்வளவு இளம் வயதிலேயே சினிமாவில் நடித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக இவர் வலம் வந்தார். அற்புதமான நடன திறமையும், அபாரமான நடிப்புத் திறமையும் கொண்ட இவர் தமிழை விட ஹிந்தி மொழிகளிலேயே அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கு சென்று அங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக இந்தி சினிமாவை ஆட்டிப் படைத்த ஒரு தமிழ் நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இப்படி மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு திகழ்ந்த இவர் சம்பளம் வாங்குவதிலும் முன்னிலையில் இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் ஒரு நடிகையை வைத்து ஒரு நிறுவனம் படம் தயாரிக்கிறது என்றால் குறைந்தது நான்கைந்து வருடங்களுக்கு அவர்களிடம் அக்ரிமென்ட் போட்டு விடுவார்கள். அதன்படி அந்த நடிகை அந்த நிறுவனத்திற்கு மட்டும்தான் அந்த காலகட்டத்தில் படம் நடித்துக் கொடுக்க வேண்டும்.

அந்த அக்ரிமென்டில் நடிகைக்கு தரப்படும் சம்பளத்தையும் அவர்கள் குறிப்பிட்டு விடுவார்கள். அப்படி வைஜெயந்தி மாலா நடித்தபோது அவருக்கு மாதா மாதம் 2250 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய மதிப்பில் பல கோடி பெரும் என்பது தான் இதில் ஆச்சரியம். இந்த சம்பளம்தான் அப்போது இருக்கும் நடிகைகளுக்கு அதிகபட்சமாக கொடுக்கப்பட்ட சம்பளம்.

அதுமட்டுமல்லாமல் வைஜயந்திமாலாவுக்கு தனியாக பெட்ரோல் அலவன்ஸ் எனப்படும் பேட்டா ரூபாய் 150 கொடுத்துள்ளனர். அந்த வகையில் இவர் தான் மற்ற நடிகைகளை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கி முன்னிலையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர் சினிமாவை விடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு அரசியலில் ஈடுபட்ட இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்