Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது நான்கு ஹீரோயின்களுடன் வைபவ் இணையும் “காட்டேரி” பட முதல் லுக் போஸ்டர் !
டி.கே
காமெடி பேய்ப்படம் ‘யாமிருக்க பயமே’ பின் ரொமான்டிக் காமெடி படம் ‘கவலை வேண்டாம்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கம் முன்றாவது படம் “காட்டேரி”. திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்தின் முதல் லுக் வெளியானது.

Katteri
இப்படத்தில் வைபவ் தான் ஹீரோ. ஹீரோயின்களாக மீசையை முறுக்கு புகழ் ஆத்மிக்கா, வரலக்ஷ்மி சரத்குமார், கப்பல் பட நாயகி சோனம் பாஜ்வா, மாற்று தெலுங்கு சினிமா ஹீரோயின் மணலி ரத்தோட நடிக்கின்றனர்.

Heroine – Katteri
மேலும் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார்.

Katteri flp
இந்த காட்டேரி ரத்தம் குடிக்காத காமெடி பேய் என்ற முன்பே இயக்குனர் சொல்லி இருந்தார். ஆகமொத்தத்தில் இந்த காமெடி காட்டேரி விரைவில் உங்களை தாக்கும்.
