டி.கே

காமெடி பேய்ப்படம் ‘யாமிருக்க பயமே’ பின் ரொமான்டிக் காமெடி படம் ‘கவலை வேண்டாம்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கம் முன்றாவது படம் “காட்டேரி”. திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். முன்பே பூஜை போடப்பட்டது, படத்தின் முதல் லுக் வெளியானது. முதலில் ஆதி ஹீரோவாக நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின, பின் வைபவ் இணைந்தார். அதே போல் ஹீரோயின் விஷயத்திலும் ஓவியா , ஹன்சிகா என்று பல மாற்றங்கள்.

Katteri

பின்னர் சினிமா உறுப்பினர்கள் போராட்டம் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. போராட்டம் முடிந்த பின் முதல் வேலையாக ஷூட்டிங் துவங்கிய படக்குழுக்களில் இவர்களும் ஒருவர்.

Heroine – Katteri

இப்படத்தில் மீசையை முறுக்கு புகழ் ஆத்மிக்கா, வரலக்ஷ்மி சரத்குமார், கப்பல் பட நாயகி சோனம் பாஜ்வா, மாற்று தெலுங்கு சினிமா ஹீரோயின் மணலி ரத்தோட நடிக்கின்றனர்.

Team Katteri

இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றதாம். மேலும் தற்பொழுது நடக்கும் வகையில் கதையும், பிளாஷ் பேக்கில் பீரியட் ட்ராமாவாக உருவாகிறது. இதில் வரலக்ஷ்மி மற்றும் ரத்தோட பீரியட் டைம்லயனில் நடித்துள்ளார்கள்.