Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் பேராசை.. உதவி செய்ய போய் தலையில் அடித்து கொள்ளும் வைபவ்
சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்க போட்டி போட்டு வருகிறார். இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குடும்ப ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருவதால் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
இருந்தாலும் இடையில் சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ என அவ்வப்போது சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார். இருந்தாலும் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க அனைத்து தயாரிப்பாளர்களும் லைனில் காத்துக் கொண்டுள்ளனர்.
அதேபோல் எதார்த்தமான காமெடி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு நிரந்தர இடம் பிடித்தவர் வைபவ். வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது தனியாகவும் சில படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.
வைபவ் தற்போது அட்லியின் உதவியாளர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு தன்னிடம் ஒரு கதை உள்ளதாக கூறியுள்ளார். அதனைக் கேட்ட வைபவ் உடனடியாக சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து விவரத்தை தெரிவிக்க அவரும் கதை கேட்டு உடனடியாக ஓகே செய்து விட்டார்.
ஆனால் இங்குதான் வைபவ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளாராம். அதனால் இந்தப் படத்தையும் உடனடியாக தொடங்க முடிவு செய்துள்ளார்.
இதனால் தற்போது வைபவ் வைத்து இயக்கி வரும் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திடீரென சிவகார்த்திகேயன் அந்த படத்தின் வேலைகளை ஆரம்பித்ததால் தன்னுடைய பட வேலைகள் கெட்டுவிட்டது என கோரிக்கை வைத்துள்ளார்.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் அதையெல்லாம் மதிக்காமல் தன்னுடைய சுயநலத்திற்காக வேலை செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றன. நல்லது செய்யப் போய் நமக்கு ஆப்பு வந்திருச்சே என கோபத்தில் உள்ளாராம் வைபவ்.
