இன்று கார்பொரேட் நிறுவங்கள் மட்டுமல்ல அரசு கூட ஒரு விஷயம் ரீச் ஆகவேண்டும் என்றால் போதிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா நகர் போலீசார் வித்தியாசமான டிவீடுகளை பதிவிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் இருவரின் போட்டோ வைத்து சாலை பாதுகாப்பு குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

Priya Prakash Varrier

பிரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டும் போட்டோவை முன்னிலைப்படுத்தி விளம்பரத்தில், “கண் இமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; எந்த சிதறலும் இல்லாமல் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்” என்று உள்ளது.

vadodharacity-police

அதே போல் அஜய் தேவ்கன் போட்டோவையும் பயன் படுத்தியுள்ளனர்.