சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாய்ப்பு கொடுத்ததற்காக இப்படியா ஜால்ரா போடுறது.. விருமன் படத்தில் நீங்களே தேவையில்லாத ஆணி தான்

சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் தற்போது பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்ட இப்படம் தற்போது ரசிகர்களை பெரிய அளவில் கவர தவறி இருக்கிறது.

இதனால் படத்தை பார்த்த பலரும் படத்தின் நிறை, குறைகள் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி, கார்த்தியின் நடிப்பு குறித்து பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர் ஒரு காட்சியில் கார்த்தியின் நடிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

அந்தக் காட்சி எடுத்து முடிக்கும் வரை நான் மெய்மறந்து அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு அற்புதமான நடிப்பை யாராலும் கொடுக்க முடியாது என்று புகழ்ந்து தள்ளி இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்தப் படத்திற்காக கார்த்திக்கு விருது கிடைக்கவில்லை என்றால் அந்த விருதுக்கே மரியாதை கிடையாது என்றும் பேசி இருந்தார்.

இதுவே ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆவலை அதிகரித்தது. ஆனால் படத்தை பார்க்கும் பொழுது வடிவுக்கரசி சொன்னது போன்று எந்த காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. வழக்கமாக கார்த்தியின் கிராமத்து படங்கள் எப்படி இருக்குமோ அப்படித்தான் விருமன் படமும் இருக்கிறது.

புதிதாக வியந்து பேசும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை என்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது மூத்த நடிகை வடிவுக்கரசி புகழ்ந்தது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. அவர் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் ஒரு படம் எப்படி வந்திருக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். பருத்திவீரன் அளவுக்கு பில்டப் செய்துவிட்டு தற்போது ரசிகர் மத்தியில் எதிர்பாராத நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது தான் உண்மை.

அப்படி இருந்தும் அவர் வாய்ப்பு கொடுத்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இப்படி புகழ்ந்து பேசி இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் அதிகப்படியான நட்சத்திர பட்டாளங்களை காட்டி ரசிகர்களை பிரமிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இத்தனை கேரக்டர்கள் தேவையில்லாமல் வந்து போகின்றனர். அதில் வடிவுக்கரசியின் கதாபாத்திரமும் தேவையில்லாத ஆணியாக தான் இருக்கிறது.

- Advertisement -

Trending News