கண்கொத்தி பாம்பாக இருந்து காரியத்தை சாதித்த வடிவேலு.. மொத்த வஞ்சகத்துக்கும் பலிகாடாக ஆன நடிகர்

vadivelu
vadivelu

Comedy Actor Vadivelu: பொதுவாக திறமை யாரிடம் கொட்டிக் கிடக்கிறதோ அவர்களிடம் தான் திமிரும் கர்வமும் தலை தூக்கி கொண்டிருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ பேர் இருந்தாலும் சினிமாவில் நாம் கண்கூடாக பார்த்து கேள்விப்பட்ட நபர் என்றால் வடிவேலு தான்.

இவர் தற்போது என்னதான் நகைச்சுவைக்கு மன்னனாக திகழ்ந்தாலும், ஆரம்ப காலத்தில் இந்த நிலைமைக்கு வருவதற்கு என்னென்ன வேலை எல்லாம் பார்த்திருக்கிறார் என்பது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் பற்றி.

Also read: யோகி பாபுக்கு தயாராகும் ரெட் கார்ட்.. வடிவேலுக்கு போட்டியாக அடுத்த வாரிசு ரெடி

இவர் நடிகர், மிமிக்ரி கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல பரிமாணங்களில் இவருடைய திறமையை அர்ப்பணித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு நுழைந்த போது நிறைய கஷ்டங்களுக்கு பிறகு இவருக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். அப்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வந்த நிலையில் தான் வடிவேலு சிறு சிறு காட்சிகளில் இடம் பெற்றார்.

அப்பொழுது சின்னி ஜெயந்த், வடிவேலுவை விட அதிகமாக சம்பளம் வாங்கி பேரும் புகழையும் வைத்திருந்தார். இந்த நிலையில் வடிவேலுக்கு தோன்றிய ஒரே விஷயம் இவரை விட எப்படியாவது ஒரு படி நம் முன்னேறி காட்ட வேண்டும் என்றுதான். இவர் நினைத்தது தப்பு இல்லை ஆனால் அதற்காக இவர் செய்த விஷயம்தான் ஏற்றுக்கொள்ள முடியாது.

Also read: சினிமாவில் ரொம்ப லேட்டா ஜெயித்த 5 காமெடி நடிகர்கள்.. வடிவேலு ரெட் கார்டுக்கு பின் வளர்ந்த சுவாமிநாதன்

அதாவது சின்னி ஜெயந்த் க்கு வரும் கால் சீட்டை தெரிந்து கொண்டு அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடம் நேரடியாக சென்று, அவர் மற்ற படங்களில் கொஞ்சம் பிசியாக இருக்கிறார். அவருக்கு பதிலாக நான் நடிக்கிறேன். ஒரு முறை அந்த காட்சியை நடித்துக் காட்டுகிறேன் உங்களுக்கு ஓகே என்றால் அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கேட்டிருக்கிறார்.

அவர்களும் சரி இவர் நடித்தால் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்று வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதன் பின் தொடர்ந்து இந்த மாதிரி பல படங்களை தன்வசம் ஆக்கிக் கொண்டார் வடிவேலு. இப்படி கண்கொத்தி பாம்பாக இருந்து கூட இருந்த நடிகரையே காலை வாரிவிட்டு மொத்த வஞ்சகத்தையும் தீர்த்துக் கொண்டார்.

Also read: சர்க்கரை நோய் மாத்திரை வாங்கக்கூட வழியில்லாத நடிகர்.. மீண்டும் கொடூர முகத்தை காட்டும் வடிவேலு.!

Advertisement Amazon Prime Banner