Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமாவில் மீண்டும் புயலாக வரப்போகும் வடிவேலு.. அடுத்த பிரம்மாண்ட படங்களின் லிஸ்ட்

vadivelu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவில் மீண்டும் புயலாக வரப்போகும் வடிவேலு.. அடுத்த பிரம்மாண்ட படங்களின் லிஸ்ட்

மதுரையிலிருந்து புயலாக கிளம்பியவர் வைகைப்புயல் வடிவேலு, சினிமாவில் இவர் இல்லாத காரணத்திலால் காமெடிக்காண வெற்றிடத்தை தற்போது வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.

தேவையில்லாமல் அரசியலில் கால் வைத்து, விஜயகாந்தை தரக்குறைவாக பேசி பல அவமானங்களை சந்தித்து சினிமாவை விட்டு விலகி இருந்தார் வடிவேலு. இவர் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு பெரும் அடிதான், ஏனென்றால் அக்கட தேசங்கள் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு வடிவேலு தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு அங்கமாக இருந்து வந்தார். தற்போது வடிவேலுவின் ஒவ்வொரு வசனங்களையும் மீம்ஸ் கிரியேட் பண்ணி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதைவிட ஒருபடி மேலாக மகிழ்ச்சியான சம்பவம் என்னவென்றால் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் வடிவேலு. தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு கைகோர்த்து உள்ளாராம். இந்த படத்தில் சிவாஜியுடன் நடித்த வடிவேலு அவரிடமே நடிப்பிற்காக பாராட்டுகளையும், கைதட்டல்களையும் பெற்றுள்ளார். இந்த படத்தில் இவர் கதாபாத்திரம் முக்கியமாக பேசப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில், P.வாசு இயக்கத்தில் வெளிவந்தது சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளார், இந்த படத்திலேயும் வடிவேலு கைகோர்த்து உள்ளாராம்.

சுந்தர் C, வடிவேலு நடிப்பில் வெளிவந்த தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் எடுக்கப்பட உள்ளது. இதில் வரும் நாய் சேகர் என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் இன்று வரை விமர்சிக்கப்பட கூடிய ஒரு கதாபாத்திரமாக அமைந்தது.

இவர் இல்லை என்றால் அந்த படத்தின் வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த அளவிற்கு காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார். இதை தவிர ஒரு சில வெப்சீரியல்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு.

கூடிய விரைவில் லாக் டவுன் முடியும் தருவாயில், தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் வடிவேலு. இவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top