Connect with us
Cinemapettai

Cinemapettai

vadivelu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆயிட்டாரு.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் திரையுலகம்

ரசிகர்கள் வைகைப்புயல் என்று அன்புடன் அழைக்கும் நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் செய்யாத அலப்பறைகள் கிடையாது. அந்த அளவுக்கு இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும், புகார்களும் இருந்தது. காமெடியனாக இருக்கும் போதே இவருடைய அலப்பறைகள் சொல்லி மாளாது.

இதில் அவர் ஹீரோவாக மாறியதிலிருந்து சொல்லவே வேண்டாம் வேற லெவல் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாகவே அவருக்கு தமிழ் திரையுலகில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்போது அவர் அதையெல்லாம் தாண்டி மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளார்.

ஆனால் இப்போது அவரை மீண்டும் பார்க்கும் திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏனென்றால் இப்போது அவர் அப்படியே தலைகீழாக மாறி விட்டாராம். மேலும் அவர் படப்பிடிப்புகளில் எவ்விதமான பிரச்சனையும் செய்யாமல் சுற்றி சுற்றி வேலை செய்துகொண்டிருக்கிறாராம்.

இதைப் பார்த்த படக்குழுவினர் வடிவேலுவா இது என்றும் ஒருவேளை மனிதன் திருந்திவிட்டாரா என்றும் ஆச்சரியப்பட்டு போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறாராம். மேலும் அவர் இப்போது சேலம், ஈரோடு, மைசூர் என்று எல்லா பக்கமும் சுற்றி சுற்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது மா மன்னன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் கலந்து கொண்ட வடிவேலு இந்த படத்தை முடித்த கையோடு நாய் சேகர் படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். இப்படி வடிவேலு நேரத்தை வீணடிக்காமல் தன்னுடைய வேலைகளை மட்டும் பார்த்து வருவதால் படக்குழுவினருக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறதாம். இதைப் பற்றிதான் தற்போது திரையுலகில் ஒரே பேச்சாக கிடக்கிறது.

Continue Reading
To Top