Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துடன் பிரச்சனை.. இருந்தும் வடிவேலு ஏன் அப்படி சொன்னார்?
தல அஜித் தமிழ் சினிமாவில் தற்போது வசூல் நாயகனாக வலம் வருகிறார். ஒருகட்டத்தில் தொடர் தோல்விகளை கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து தன்னை தானே செதுக்கியவன் என்பதைப்போல தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
அதேபோல் காமெடியில் தமிழ் சினிமாவில் தனி ஒரு நாயகனாக கலக்கியவர் வடிவேலு. இவர் காமெடி காட்சிகளுக்காகவே திரையரங்குகளுக்கு சென்ற கூட்டங்கள் உண்டு.ஆனால் அரசியலில் ஈடுபட்டதால் தற்போது சினிமாவில் நடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
அப்படி அவ்வப்போது நடித்தாலும் பெரிதாக மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆகையால் தற்போது மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை நிரப்பி விட வேண்டுமென பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க ரெடியாகி வருகிறார்.
தற்போதெல்லாம் நடிகர்கள் சமூக வலைதளங்களில் இருக்கிறார்களோ இல்லையோ அவரது பெயரில் போலி அக்கவுண்ட்களை நிறைய உள்ளன. அப்படி வடிவேலு ட்விட்டரை விட்டு வெளியேறி நீண்ட காலமாகிவிட்டது. தற்போது மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ள வடிவேலு தன்னுடைய பெயரில் போலி கணக்கு வலம் வருவதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடன் நடித்த நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் போன்றவர்களிடம் நன்றி தெரிவித்துள்ளார். ராஜா படத்தின் போது தல அஜித்துடன் வடிவேலுவுக்கு சின்ன மனகசப்பு ஏற்பட்டு ஏற்பட்டதால் தற்போது வரை இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
ஆனால் இருந்தாலும் வடிவேலு அஜித்தை கை கூப்பி வணங்குகிறேன் என கூறியுள்ளது மீண்டும் அஜித் வடிவேலு கூட்டணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எப்படியோ காமெடி நடிகர்கள் என்ற பெயரில் வலம்வரும் சிலரை வடிவேலு மீண்டும் விரட்டி அடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
