Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆட்டத்தை ஆரம்பித்த வடிவேலு.. தயாரிப்பாளர்களுக்கு பதிலடி.! எனக்கு எண்டே கிடையாது கண்ணா
தமிழ் சினிமாவில் காமெடியில் அரசனாக இருந்தவர் வடிவேலு. இவரது காமெடிக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். சமீபகாலமாக வடிவேலு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் 24ம் புலிகேசி.
ஆனால் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அதற்கு வடிவேல் படம் எடுக்க தாமதம் ஆவதால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் அதனால் மன உளைச்சலால் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு ரெக்கார்ட் அனுப்பியது அதைப் பற்றி வடிவேல் இடம் கேட்டபோது, அதற்கு வடிவேல் தனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகவும், தயாரிப்பாளர்கள் ரெட் கார்டு கொடுத்தால் என்ன உலக அளவில் இருப்பது இணையதளம்தான், அதனால் நெட்ப்ளிக்ஸ் இல் நடித்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
