தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகரான வடிவேலு தற்போது தான் சினிமாவின் ரெட் கார்ட் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து தமிழ் சினிமாவில் மீண்டும் தன் தடத்தைப் பதிக்க பல படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அப்படி அவர் ஹீரோவாக நடித்து வரும் படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படம் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் தயாராகி வருகிறது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு,ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிப்பதாக கூறி படத்தினை தயாரித்து வருகிறது. லைக்கா மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் என்று அனைவருக்கும் தெரியும். அதன் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பிரமாண்டமான படங்களாகவும், பெரிய பட்ஜெட் படங்களாகவும் தான் இருக்கிறது. அவர்கள் திரும்பவும் வெகுநாட்கள் கழித்து திரைக்கு நடிக்க வந்திருக்கும் வடிவேலுவுக்கு கைகொடுக்கும் வகையில் அவரின் மூன்று படங்களை அடுத்தடுத்து லைக்காவின் பேனரில் எடுப்பதாக உத்தரவாதம் அளித்து இருக்கின்றனர்.
இப்படி தாமாக முன்வந்து வடிவேலுக்கு கைகொடுத்த லைகா புரோடக்சன்ஸ் வடிவேலுவின் வாழ்வில் மீண்டும் ஒரு அத்தியாயத்தை தொடங்குவதற்காக தான் கை கொடுத்தார்கள் என்று நினைக்கும் போது உண்மையில் அப்படி இல்லை. நாய் சேகர் படக்குழு படத்தை மிக பிரம்மாண்டமாக வடிவேலுவின் கம்பேக் திரைப்படமாக அமைய வேண்டும் என்று மிகப்பெரிய உழைப்பை போட்டு படத்தை எடுத்து வருகிறது.
ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா 100 ரூபாய் 200 ரூபாய்க்குக் கூட கணக்கு பார்ப்பதால் படக்குழு அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறது. படக்குழு தனக்கு தோன்றியதை திரையில் காண்பிப்பதற்கு மிக முக்கியமாக இருப்பது தயாரிப்பாளர்கள்தான். அவர்கள் உதவவில்லை என்றால் எந்த ஒரு படமும் நினைத்தது போல வராது.
அப்படி இருக்கையில் நாய் சேகர் படத்தில் வடிவேலு ஒரு பணக்கார கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல் சில ஆடம்பர வசதிகளை திரையில் காண்பித்தால் மட்டுமே அது ரசிகர்கள் பார்க்கும் போது எதார்த்தமாகவும் உண்மையாகவும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் கொடுப்பதற்கு லைகா நிறுவனம் தயாராக இல்லை. அவர்கள் சிக்கனம் பிடித்து படத்தின் செலவை குறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
மேலும், படப்பிடிப்பின் போது நடக்கும் அத்தனை செலவுகளையும் அவர்கள் கணக்குப் பார்க்கிறார்களாம். ஒரு நாள் படப்பிடிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை கணக்கில் வைத்துக்கொண்டு, ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விடாப்பிடியாய் நிற்கிறார்களாம். இதனால் படக்குழு மிகுந்த அப்செட் ஆகி இருக்கிறதாம்.
படம் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கணக்குப் பார்த்தால் எப்படி ஒரு முழு நீள நல்ல படத்தை எடுத்து கொடுக்க முடியும் என்று படக்குழு திணறி வருகிறது. இந்த லாஜிக்கை மட்டும் புரிந்துகொள்ள ஏன் தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை என்றும் படக்குழு குமுறி வருகிறது. வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் நன்றாக கல்லா கட்டலாம் என்று நினைத்த லைக்கா நிறுவனம் தற்போது ஏன் அப்படி நடந்து கொள்கிறது என்பது தான் சினிமா வட்டாரத்தின் கேள்வியாக இருக்கிறது.