நீண்ட இடைவேளைக்கு பிறகு அட்லி இயக்கும் ”விஜய் 61 ” திரைப்படத்தில், விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் வைகைப் புயல் வடிவேலு.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னையிலுள்ள ஈ.வி.ஆர் பொழுதுபோக்கு பூங்காவில்,விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ’விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு நடித்து வருகிறார். அவருக்கு விஜய்க்கும் இடையிலான நகைச்சுவை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. நகைச்சுவை காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளில் படப்ப்பிடிப்பு நடைபெற உள்ளது.