Tamil Cinema News | சினிமா செய்திகள்
32 வருடம் கழித்து பிரபல இயக்குனருடன் கூட்டு சேரும் வடிவேலு.. இவர் மட்டும் என்ன தக்காளி தொக்கா?
ஒரு காலத்தில் வம்பு நடிகர் என்றால் சிம்புவை தான் சொல்லுவார்கள். ஆனால் அவரே திருந்தி விட்டார். தற்போது புதிய வம்பு மன்னனாக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு.
திறமையான வசன உச்சரிப்பிலும் உடல் மொழியிலும் அனைத்து ரசிகர்களையும் தன்னுடைய காமெடி காட்சிகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு.
இவர் தமிழ் சினிமாவில் விட்டுச் சென்ற இடம் அப்படியேதான் உள்ளது. இருந்தாலும் இடையில் நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.
அப்படிப்பட்ட வடிவேலு தன்னுடைய சினிமா வாழ்க்கையின் பெரும்பாலான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். ஆனால் ஒரே ஒரு இயக்குனருடன் மட்டும் 32 வருடமாக ஒன்று சேரவில்லை.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொட்டதெல்லாம் வெற்றியாக பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் பாரதிராஜா. இவருக்கு இயக்குனர் இமயம் எனும் பட்டப்பெயரும் உண்டு.
செட்டு போட்டு எடுத்துக் கொண்டிருந்த சினிமாவை நேரடி லொகேஷன்களுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும். பாரதிராஜாவின் அன்றைய படங்கள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.
தற்போது பாரதிராஜா ஒரு OTT தளத்திற்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரதிராஜா உரிமையுடன் கேட்டுக் கொண்டதால் வடிவேலு ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இருந்தாலும் இன்னும் சம்பளம் பேசவில்லை என்பதால் அந்த நேரத்தில் குறுக்கில் கட்டை போட்டாலும் போடுவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வடிவேலு நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் நீண்ட நாட்களாக சம்பள பிரச்சினையில் தடுமாறி வந்த நிலையில் பாரதிராஜாவுக்கு மட்டும் ஒப்புக் கொண்டது சங்கரை கடுப்பேற்றி உள்ளதாம்.
