Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-7-best-comedy-movies-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பவும் இப்பவும் என் கண்ணுக்கு கமல் கடவுளா தான் தெரிகிறார்.. பிரபல காமெடியன் கொடுத்த வெறித்தனமான பேட்டி!

தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய நாயகனாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் கடந்த நவம்பர் ஏழாம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் அவர் தமிழ் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள்  ஆனதால் அதையும் கொண்டாடி வருகிறது தமிழ் சினிமா.

இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கமலஹாசனை குறித்து கூறியிருக்கும் சுவாரஸ்யமான தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதாவது வைகைபுயல் என்ற பட்டத்துடன் பல வருடங்கள் காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் வடிவேலு.

தற்போது வடிவேலு கமலஹாசனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடனான பழக்கத்தை பற்றி பிரபலமான செய்தி இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் சிங்காரவேலன் படத்தோட ஷூட்டிங்கின்போது கமலஹாசன் வடிவேலை அழைத்து, ‘என்னோட ஆபீஸ் போங்க. அங்க டிஎம்எஸ் சாரை பாருங்க’ என்று கூறினாராம்.

அதற்குப்பின் வடிவேலு அன்றே டிஎம்எஸ்சை கமலுடைய ஆபீஸில் சந்தித்ததாகவும், மேலும் 5000 ரூபாய்  பணத்தை ‘தேவர்மகன்’ படத்திற்கு அட்வான்ஸ் பணமாக  கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வடிவேலு.

இதனை அடுத்து பேசிய வடிவேலு, ‘இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என் உடம்பை தட்டிக்கொடுத்து நீ தான்டா ஒரிஜினல் மதுரை பாஷை பேசி இருக்கேன்னு சொன்னாரு. இது எல்லாத்துக்குமே காரணம் கமல் சார் தான். அப்பவும் இப்பவும் என் கண்ணுக்கு அவர் கடவுளா தான் தெரிகிறார்’ என்று தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே வடிவேலுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பை தந்த கமலுடைய பெருமையை அவருடைய ரசிகர்கள் பட்டி தொட்டி எங்கும் பரவ செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top