வடிவேலுவை மதிக்காமல் பிரியா பவானி சங்கர் கொடுத்த ஷாக்.. மன உளைச்சலில் இயக்குனர் போட்ட பிளான்

சினிமாவில் நடிக்க தடைகாலம் நீங்கி ஒரு வழியாக வடிவேலு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துவரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்தில் பிக்பாஸ் சிவானி, லொள்ளுசபா மாறன், ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக முதலில் பிரியா பவானி சங்கரை படக்குழு அணுகியுள்ளது. தற்போது ப்ரியா பவானி சங்கர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்த பிரியா பவானி சங்கர் விலகிவிட்டார்.

இதனால் வடிவேலு அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் வேறு ஒரு நடிகையை இந்த கதாப்பாத்திரத்திற்கு போடலாம் என படக்குழுவுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் ப்ரியா பவானி சங்கர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்துகொண்டு மீண்டும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நான் வடிவேலுடன் ஜோடி சேர்ந்து தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். இந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் என்னால் நடிக்க முடியும் என்று ஒரு ஷாக் ஆன பதிலைக் கொடுத்து படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்காக ஒரு கணிசமான தொகையையும் பிரியா பவானி சங்கர் பெற்றுள்ளார். ஆனால் இது வடிவேலு தரப்பிலிருந்து மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்ம கூட ஜோடி போட்டு நடிக்க இப்படி தயங்குகிறார்களே என்று அவர் யோசித்து வருகிறார்.

ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்தில் வடிவேலுடன் நடனம் ஆடியிருந்தார். அப்போது அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் சரிந்தது. அதேபோல் நடிகை சதா வடிவேலுவின் எலி படத்தில் நடித்ததால் அவரது மார்க்கெட்டும் போய்விட்டது. அதனால் பிரியா பவானி சங்கர் இப்படி யோசித்ததில் எந்த தவறும் இல்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Next Story

- Advertisement -