Connect with us
Cinemapettai

Cinemapettai

vadivelu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒன்னா ரெண்டா வரிசையாக 10 படங்களில் கமிட்டான வடிவேலு.. தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு

​ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகர் என்றால் அது வடிவேலு தான். கவுண்டமணி, செந்திலுக்கு பின்னர் சோலோவாக காமெடி செய்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர் இவர் தான். இவரது பாடி லாங்குவேஜ் பலருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக குழந்தைகளுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டது. அதில் இருந்து வடிவேலுவை படங்களில் பார்க்கவே முடியவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு, உங்களுக்கு எல்லாம் ஓராண்டாக தான் லாக்டவுன். ஆனால் எனக்கோ பத்து வருஷமாகவே லாக்டவுன் தான் என்று கூறி கண் கலங்கினார். இதற்கிடையில் இம்சை அரசன் பட பிரச்சனையை தீர்க்க முயன்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் முயற்சியும் தோல்வி அடைந்தது.

அதை பார்த்த ரசிகர்களோ, இனி வடிவேலுவை படங்களில் பார்க்கவே முடியாதா என்று வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக நல்ல செய்தி வந்துள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்கிற படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறாராம்.

vadivelu-cinemapettai

vadivelu-cinemapettai

அது மட்டும் அல்ல தொடர்ந்து 10கதைகளில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறாராம். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனி வரிசையாக வெளிவருமாம். இனி நீங்கள் என்னை படங்களில் அடிக்கடி பார்க்கலாம் என்று தலைமை செயலகத்திற்கு வந்த வடிவேலு கூறியதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
To Top