காமெடியில் இருந்து நடிகர்களாக மாறிய 4 பிரபலங்கள்.. வைகைப்புயல் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துருச்சு!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பல காமெடி நடிகர்கள் உருவாகி உள்ளனர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர். அந்த வரிசையில் கவுண்டமணியின் தொடங்கி தற்போது யோகிபாபு வரை பல காமெடி நடிகர்களில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன ஒரு கட்டத்திற்கு பிறகு எம்ஜிஆர், நாகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என காத்திருந்த காலமெல்லாம் உண்டு.

அதன் பிறகு பல நடிகர்களும் தங்களது படத்தில் கவுண்டமணி நடிக்க வைப்பதற்கு காத்திருந்தனர். அதற்குக் காரணம் தனது தனித்துவமான பேச்சாலும் நக்கலாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

அதன்பிறகு நிரந்தரமான காமெடி நடிகராக தற்போது வரை ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கக் கூடிய ஒரே நடிகர் வடிவேலு இவரது படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் தற்போது நடக்கும் சூழல்களை வடிவேல் மீம்ஸ் வைத்துதான் உருவாகி வருகின்றனர். அந்த அளவிற்கு வடிவேலு நகைச்சுவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

வடிவேல் சினிமா விட்டு விலகி இருந்தாலும் பிரபலங்களும் பலரும் யாரு வேண்டுமானாலும் தற்போது காமெடி நடிகராக வரலாம் ஆனால் மீண்டும் வடிவேலு நடிக்க ஆரம்பித்து விட்டால் எந்த காமெடி நடிகரும் சினிமாவில் இருக்க முடியாது என வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

அதன் பிறகு சந்தானம், சூரி, யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியோர் மட்டுமே தற்போது காமெடி நடிகர்களாக நடித்து வருகின்றனர். இதில் மூன்று பேருமே கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்துள்ளனர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்திலும், யோகி பாபு தர்ம பிரபு எனும் படத்திலும் மற்றும் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்திலும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

yogi babu
yogi babu

இப்படி காமெடி கதாபாத்திரத்தை விட்டுவிட்டு ட்ராக் மாறி  செல்லுவதால் தற்போது  காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வடிவேலு களத்தில் இறங்கினால் விட்ட மார்க்கெட்டை ஈசியாக பிடித்து விடலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்