fbpx
Connect with us

Cinemapettai

வடிவேல் பாலாஜி இறந்ததற்கான காரணம் இதுதானாம்! இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்க கூடாது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடிவேல் பாலாஜி இறந்ததற்கான காரணம் இதுதானாம்! இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்க கூடாது

விஜய் டிவியில் நடைபெற்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தவர் வடிவேல் பாலாஜி. இந்நிலையில் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

42 வயதான வடிவேல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

முதலில் சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்த வடிவேல் பாலாஜி, ஒரு கட்டத்தில் ஹாஸ்பிடல் பில் கட்ட முடியாமல் திணறி வந்ததாக தெரிகிறது.

இதனால் உடனடியாக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் பாலாஜி. இந்நிலையில் சக நண்பர்களிடமும் விஜய் டிவி இடமும் உதவி கேட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் வடிவேல் பாலாஜிக்கு உதவி செய்வதில் இருந்து விஜய் டிவி பின் வாங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

பணம் கட்டி சிகிச்சை பெற முடியாத நிலையில்தான் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் போராடியும் வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம்.

15 நாட்களாக பணம் கட்ட முடியாமல் தடுமாறி வந்த வடிவேல் பாலாஜிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்ய யாருமே இல்லாமல் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

வடிவேல் பாலாஜி பணம் கேட்ட சமயத்தில் யாரேனும் பணம் கொடுத்து உதவியிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் என வெளிவந்த செய்தி விஜய் டிவி மீதும் அவரது நண்பர்கள் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்று விஜய் டிவி தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

Continue Reading
To Top