நகைச்சுவை மற்றும் மிமிக்ரியில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இவரின் நகைச்சுவை திறனும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் இவரின் புகழுக்கு முக்கிய காரணமாக அமைந்த ஒன்று.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் நகைச்சுவையால் அசத்தியவர். அதைத்தொடர்ந்து ஜோடி நம்பர் 1 சீசன் 8 போட்டி பங்கு பெற்றார்.
அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற சுற்றுக்கு மட்டுமே பல ரசிகர்கள் இருந்தனர். வடிவேல் பாலாஜி ஒன் மேன் ஆர்மியாக காமெடியில் கலக்குவார்.
வடிவேலுவின் குறளையும் அவரின் உடல் மொழியையும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் பின்பற்றுவார். அதனால் ரசிகர்களால் அன்போடு வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
திறமைகள் உள்ள பலரை தொலைக்காட்சிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு அனைவருக்கும் பிடித்த வடிவேல் பாலாஜியை இறைவனுக்கும் அதிகமாக பிடித்துவிட்டது போலும். அதனால் தான் அவரை வெகு சீக்கிரமாகவே அழைத்துக்கொண்டார். கடந்த வருடம் செப்டம்பர் 10-ஆம் தேதி உடல்நலக் குறைவினால் நம்மை விட்டு நீங்கினார் .
இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் முதல் நினைவு தினத்தை சிரிச்சா போச்சு குழுவினர் அவருடைய கல்லறையில் அனுசரித்தனர். சிரிச்சா போச்சு இயக்குனர் தாமஸின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். சிரிச்சா போச்சு படைத்தளபதி இறந்து ஒரு வருடம் ஆகியும் எங்களின் நினைவில் வாழ்கிறார் என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.