சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் திருடனாகவும் ஜகபதி பாபு வருமான வரித்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளனர். தமன்னா இப்படத்தில் ஜகபதி பாபு மகளாக நடிக்கவுள்ளார்.

மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடியனாக இப்படத்தில் கலக்கவரும் வடிவேலு, இதில் டாக்டராக படம் முழுக்க வரும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.