தனுஷ் நடிப்பில் சில தினங்களாக வெற்றி நடைபோட்டு வரும் வெற்றிமாறனின் வடசென்னை படம் இரண்டாம் பாகம் வெளிவருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இதில் ராஜா கேரக்டராக வளம் வரும் அமீர் நடித்திருந்த முதலிரவு காட்சி சர்ச்சைக்கு உள்ளாகியது. அந்த காட்சி படத்தில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது.

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம் போன்ற வித்தியாசமான கதை களத்தை உருவாக்கி தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் பதித்து விட்டார். வடசென்னை-2 படம் வெளிவரப் போவதாக கூறப்பட்டது ஆனால் தற்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

Vetrimaaran-Dhanush-VadaChennai

 

இதற்கு முன்னதாக ‘ராஜா வகையறா’ என்ற வெப் சீரியல் எடுக்க உள்ளதாகவும் அதில் வடசென்னை படத்தில் வரும் அமீர் கேரக்டரை சிறுவயதிலிருந்தே எடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இது வடசென்னை படத்தின் எதிர்ப்புக்கான ஒரு காரணமாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப் சீரியலில் அமீர் கேரக்டரை மிக அழுத்தமாக சொல்ல உள்ளதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இது முடிந்த பின்னரே வடசென்னை-2 பற்றி செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.