பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் “வட சென்னை”.கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங்.

vada chennai

வட சென்னை – பார்ட் 1

தனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

vada chennai part 1

முதல் பகுதி 1980களில் நடப்பது போன்ற கதைக்களமாம். அந்த பார்ட் 1 ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் நாளை படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் இப்படத்தினை பற்றிய சில விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிவிட்டனர் தனுஷ் ரசிகர்கள்.

படத்தை பற்றிய சில விஷயங்கள் பின்வருமாறு ..

வடசென்னை 35 வருஷ வாழ்க்கையின் கதை. இப்படத்தின் முதல் பாகம் ஜூன் மாதம் வெளியாகிறது.

vada chennai

தனுஷ் தேசிய அளவில் காரம் போர்டு சாம்பியனாக நடித்துள்ளாராம்.

தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ் அன்புவாக, ஐஸ்வர்யா பத்மாவாக நடித்துள்ளனர்.

dhanush aishwarya rajesh

இயக்குனர் சமுத்திரக்கனி குணவாக, இயக்குனர் அமீர் ராஜனாக, ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் மொத்தம் 4 பாடல்கள்.

ஒரு தலைவரின் மரணம், கட்சி உடைவது என்று அரசியில் பின்னணயில் வட சென்னை வாழக்கை காட்டுமாம் இப்படம்.

vada chennai

மேலும் பல தகவல்கள் நாளை வெளிவரும். அது வரை காத்திருப்போம்.