Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை இந்த படத்தின் காப்பியா.? டிவிட்டரில் ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகர்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது இதில் முதல் பாகம் தான் நாளை ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்தில் 30 ஆண்டுகால வட சென்னையின் வரலாற்றை கூறுகிறார்கள் தனுஷ் ரசிகர்களையும் தாண்டி இந்த திரைப்படம் மற்ற ரசிகர்களையும் மக்களிடமும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
படத்தின் கதை கேரம் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர் எப்படி மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்பது தான் கதை, ஆனால் இதுபோல் உள்ள கதையில் ஏற்கனவே நான் நடித்துள்ளேன் என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார், மேலும் அவர் கூறியதாவது நான் நடித்த படத்துலயும் கேரம் விளையாடுபவர் பெரிய தாதாவாக மாறுவதுதான் கதை.
ஆனால் வெற்றிமாறன் கண்டிப்பாக தனது ஸ்டைலில் மேஜிக்கை காட்டியிருப்பார் என நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சித்தார்த் தனது டிவிட்டரில் அந்த ஸ்டிக்கர் படத்தின் ஒரு பாடலையும் காட்டியுள்ளார்.
