Tamil Cinema News | சினிமா செய்திகள்
விதியின் மைந்தன், வட சென்னையின் இளவரசன் ! புதிய போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ் !
வட சென்னை
ரசிகர்களிடம் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

vada chennai feat
தினம் ஒருவரின் கதாபாத்திர பெயருடன் அவர்களின் கெட் அப் போஸ்டரை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அன்பு என்று தான் நடிக்கும் ரோலின் போஸ்டருடன் அன்பு அக்டோபர் 17 வருகிறான் என்று ரிலீஸ் தேதியை அறிவித்துளார்.
#vadachennai … #anbu .. Son of destiny ; prince of the hood .. arrives #october17 .. pic.twitter.com/7duEe5LScz
— Dhanush (@dhanushkraja) August 22, 2018

Anbu in VADA CHENNAI
