dhanush-vada-chennai-review

வடசென்னை படம் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். வெற்றி பெறுமா? இல்லை தோல்வியடையுமா? என்ற கேள்விக்கு பதில் ரொம்ப தேடவேண்டியதில்லை இவர்கள் இருவரின் கூட்டணியே படம் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக எல்லாரையும் படம் பார்க்க வைக்கும், படமும் அப்படியே அமைந்திருக்கிறது.

வடசென்னை படத்தை பொறுத்தவரையில் நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியாது அனைவரும் அதன் கேரக்டராகவே இருந்தனர். அதிலும் டேனியல் பாலாஜி ஒரு கொலை நடந்தபின் வெளியே வந்து அழும் காட்சி அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை நிரூபித்தார். தானாக சிறைக்கு செல்லும் தனுஷ் சிறைச்சாலையில் நடக்கும் சண்டை, சிறையில் பேசும் வசனம் என அனைத்தும் மிக இயற்கையாக இருந்தது.

அமீர் ஜோடியாக இருந்த ஆண்ட்ரியா, சமுத்திரகனியுடன் எப்படி இணைகிறார் என்பதும், சில காட்சிகளில் யார் கெட்டவர்கள் யார் நல்லவர்கள் என தனுஷ் குழப்பிக் கொள்வதும் மிக எதார்த்தமாக இருந்தது. உண்மையிலேயே வடசென்னை படத்தின் ஒரு முக்கிய ஹீரோவாக சந்தோஷ் நாராயணன் இருப்பார். சில கொலைகள் நடக்கும் பொழுது வரும் பயத்தை சந்தோஷ் நாராயணன் இசை மட்டுமே காட்டுகிறது. அந்த இசையில் தனுஷ் நடிப்பும் சேர்ந்ததால் அது வேற லெவல்.

அதிகம் படித்தவை:  வடசென்னை முதல் நாள் வசூல்.! பாக்ஸ் ஆபிசை தினறவைக்க போகிறதா.? வசூல் விவரம் இதோ
vada chennai
vada chennai

தேவையில்லாத பாடல்களை போட்டு போரடிக்காமல் எடுத்து சென்ற வெற்றிமாறனுக்கு ஒரு நன்றி. கண்டிப்பாக வடசென்னை படத்தை ஒரு பாகமாக எடுக்க முடியாது, மூன்று பாகமாக எடுப்பது என்பது சரியான முடிவு ஆனால் அதனை சீக்கிரமே வெளியிடுவது வெற்றிமாறனுக்கு நல்லது. வடசென்னை படத்தின் கேரக்டர்கள் மறப்பதற்கு முன்பே அடுத்த பாகங்களையும் விட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.

சந்திரா கேரக்டரில் நடித்த ஆண்ட்ரியா பார்வையிலேயே மிரட்டியிருந்தார். ரவுடிகளை விட அவரின் நடிப்பு பயப்பட வைத்தது. வடசென்னை படத்தின் எடிட்டிங், கேமரா இரண்டும் குழப்பமான கதையை அழகாக புரியவைத்தது. இது ஒரு கேங்ஸ்டர் படம் இந்தப் படத்தில் கதை இல்லை, நிறைய சண்டை இல்லை என குறை சொல்வதை விட்டு விட்டு தேவையான இடத்தில் மட்டும் சண்டைக் காட்சிகளை வைத்ததற்கு வெற்றிமாறனுக்கு ஒரு நன்றி.

அதிகம் படித்தவை:  கபாலியால் விஐபி-2 க்கு வந்த பெரும் பாதிப்பு.!!!

வடசென்னை படத்தின் இசை, சண்டைகள் என காட்பாதர் படத்தை நினைவு படுத்தினாலும் இதன் மூன்று பாகங்களும் வரும்பொழுது கண்டிப்பாக இது நம்ம ஊரு காட்பாதர்தான். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடினாலும் படம் முடியும் பொழுது அடுத்த பாகத்தை அடுத்த மாதமே விட்டால் நல்லா இருக்குமே என்ற மனநிலை இருக்கும். முக்கியமா தனுஷ் ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்ப்பார்கள். இது ஒரு கேங்ஸ்டர் படம் என மனதில் வைத்து செல்லுங்கள், கண்டிப்பாக ஒரு தடவை இல்லை ரெண்டு தடவை பார்க்கலாம்.

Rating: 3.5/5