Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்! பதறும் தனுஷ்

நாங்க ஒரு பொண்ண கஷ்டப்பட்டு வளர்த்து வைப்போம் நீங்க அஞ்சு ரூபா அயன் பண்ண சொக்கா போட்டு வந்து கரெக்ட் பண்ணிட்டு போயிடுவீங்க என்று சந்தானம் சொல்வது போல் இருக்கிறது வடசென்னை படம். கஷ்டப்பட்டு படம் எடுத்து அதே நாளன்று தமிழ் ராக்கர்ஸ் இல் வெளிவந்தது வடசென்னை. ஏதோ நல்ல வேலை படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் வடசென்னை பெரும் சிக்கலை சந்தித்திருக்கும்.

vadachennai

வடசென்னை படம் ரிலீசான அன்றே சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ்ஸில் படம் வெளிவந்தது வெளிவந்த சிறிது நேரத்தில் படத்தின் டவுன்லோடிங் எண்ணிக்கை அதிகமானது. நல்ல விமர்சனம் செய்து வந்துள்ளதால் டவுன்லோட் எண்ணிக்கை ரொம்ப அதிகமானது.

வடசென்னை 65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மூன்று வருடமாக உழைத்துள்ளனர் ஆனால் தமிழ் ராக்கர்ஸ் அதனை சிறிது நேரத்தில் வெளியிட்டு மொத்த வசூலிலும் மண்ணை அள்ளிப் போட்டு விடும் என்று படக்குழுவினர் பயந்தனர். புதுப்படங்கள் ரிலீஸ் ஆன கையோடு தமிழ் ராக்கர்ஸ் வெளிவருவதால் படத்தை எடுப்பவர்கள் விஷாலிடம் குறை சொல்வதற்கு பதிலாக நேரடியாக தமிழ் ராக்கர்சிடம் கெஞ்சி கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் விடுவதாக இல்லை.

மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் விஷால் ஆனால் கோலிவுட் வட்டாரம் இந்த தமிழ் ராக்கர்ஸ் இடம் இருந்து எங்களை காப்பாற்றினாலே அது பெரிய உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதெல்லாம் புரிந்து விஷால் ஏதேனும் ஒரு வழி பண்ண வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top