Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துக்கு வில்லனாக வந்த வடசென்னை ரவுடி.. தரமாக வந்த தர லோக்கல் அப்டேட்
2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு தல ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய படங்களில் வசூலில் உச்சத்தை தொட்டார். தற்போது இரண்டாவது முறையாக எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் தல அஜித் இந்த படத்திற்காக கட்டு மஸ்தான உடற்கட்டுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனால் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பு தருவதில் தல அஜித்திற்கு நிகர் அவரே.
ஆம். மெட்ராஸ், வட சென்னை போன்ற படங்களில் நடித்த நவநீதன் என்பவர் வலிமை படத்தில் அஜீத்துக்கு வரும் வில்லன்களில் ஒருவராக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

navaneethan-vadachennai
இந்த நவநீதன் சமீபத்தில் வெளியான v-1 என்ற படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
