வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் வட சென்னை. இப்படத்தில் தனுசுடன் விஜயசேதுபதி, அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, டேனியேல் பாலாஜி, கிஷோர், பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங் கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதுகுறித்து அப்படக்குழுவிடம் விசாரித்தபோது, இந்த வடசென்னை படத்தில் நடித்த பிறகுதான் மற்ற படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்திருந்தாராம் தனுஷ். ஆனால், விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, 3 மாதங்கள் யுஎஸ் சென்று விட்டாராம் டைரக்டர் வெற்றிமாறன். அதனால்தான், பவர்பாண்டி படத்தை திடீரென்று தொடங்கியிருக்கிறார் தனுஷ். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நேரத்திலும் வெற்றிமாறன் வராததால், வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். ஆக, இப்போது விஐபி-2 படத்தில் நடித்து முடித்த பிறகுதான் வடசென்னையில் நடிக்கும் முடிவில் தனுஷ் இருப்பதாக கூறப்படுகிறது.