Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை ஷூட்டிங்கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .
வடசென்னை
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ள படம். காங்ஸ்டார் படமான இது முதல் பார்ட் தான். அன்பு ரோலில் தனுஷின் நடிப்பை விட ராஜனாக இயக்குனர் அமீர், பத்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், சந்திரவாக ஆண்ட்ரியாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பது.
சந்திரா – ஆண்ட்ரியா
ஹீரோயின் தான் என்றில்லாமல், கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை. பல ஜானர், வித்யசமான ரோல் என்றால் ஆர்வமாக ஓகே சொல்பவர். பளீச்சென்ற தோற்றத்தில் முதலில் வடசென்னையில் அமீரின் காதல் மனைவியாக மற்றும் சமுத்ரகனியின் மனைவியாக உடன் இருந்தே பழி தீர்க்கும் ரோல் இவருடையது.
இவர் பிரபல நாளிதழுக்கு இந்த சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

Vada Chennai
நார்த் மெட்ராஸ் பின்னணியில் கதை என்பதால், நடை, உடை,ஸ்லாங் என்பதை தாண்டி மீன் கிளீன் செய்து கழுவதையும் கற்றுக்கொள்ளுமாறு இயக்குனர் வெற்றிமாறன் சொல்லிவிட்டாராம்.
எனவே ஆரம்ப நாட்களில் ஷூட்டிங் முடிந்த பின் ஏரியா பெண்களிடம் எவ்வாறு மீன் வெட்டி கழுவது என தெரிந்துகொண்டாராம் ஆண்ட்ரியா. ஒருமுறை மீனின் செதில் குத்தி காயம் கூட ஏற்பட்டதாம்.
என்ன செய்து என்ன பிரயோஜனம், படத்தின் நேரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக படமாக்கப்பட்ட அந்த காட்சியை நீக்கிவிட்டார்களாம்.
சினிமாபேட்டை குசும்பு
அட விடுங்க சந்திரா, அடுத்த பார்ட்டில் வைக்க சொல்லிடுவோம். இந்த மீன் சமாசாரத்துக்காகவே ஆண்ட்ரியா ஆர்மி ஆரம்பிச்சு ட்விட்டரை தெறிக்க விடப்போறோம் நாங்க.
