Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை.! இதோ 4 நாள் வசூல் நிலவரம்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால் குடும்பத்துடன் யாரும் படத்தை காண வர மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் பலர்.

vada chennai
ஆனால் அவர்கள் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக ரசிகர்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக படத்தை கண்டு வருகிறார்கள் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக தான் ஓடிக்கொண்டு இருக்கிறது, இந்த நிலையில் வட சென்னை படத்தில் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.
வடசென்னை திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி வரை வசூல் செய்துள்ளது அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 40 கோடியை வசூல் தாண்டியிருக்கும் என கருத்துக் கணிப்பு கூறப்படுகிறது, தனுஷின் திரைபயனத்தில் இந்த திரைப்படம் தான் ஓபனிங் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
