2015ஆம் ஆண்டில் வெளிவந்த விசாரணை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கம் படம் “வட சென்னை”. வடசென்னை படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கடேஷ் எடிட்டிங். கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் .

அதிகம் படித்தவை:  பெரிய பட்டியலே இருக்கிறது... நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி
vada chennai

தனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

Costume Designer AMIRTHARAM eith director VETRIMAARAN
Costume Designer AMIRTHARAM eith director VETRIMAARAN

நேற்று மாலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

vada chennai
vada chennai
vada chennai

இந்த போட்டோக்களை ஒருவர் பின் ஒருவாறாக ஷேர் செய்ய, யாரோ ஒருவர் தவறாக தன் ட்விட்டரில் ஷூட்டிங் முடிவடைந்தது என தவறாக பதிவிட, படப்பிடிப்பு நிறைவடைந்து என பரவியது. எனினும் இச்செய்தி வதந்தியே. ‘வடசென்னை’ ஷூட்டிங் இன்னும் நிறைவடையவில்லை. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  தமிழ் திரையுலகத்தை வருத்தத்தில் ஆழ்த்திய இசையமைப்பாளர் மரணம்!
vada chennai

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.