fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமாவுல பொண்ணா இருந்தா என்ன வேணா பண்றாங்க.. பட்டும் படாமல் வெளுத்து வாங்கிய வடசென்னை கதாநாயகிகள்!

vadachennai-cinemepettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவுல பொண்ணா இருந்தா என்ன வேணா பண்றாங்க.. பட்டும் படாமல் வெளுத்து வாங்கிய வடசென்னை கதாநாயகிகள்!

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ‘வடசென்னை’ படத்தில் முன்னணி கதாநாயகிகளாக நடித்தவர்கள் நடிகை ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர்கள் இந்தப்படத்திற்கு பிறகு நெருங்கிய தோழிகளாக மாறி விட்டனர். இருவரும் திடீரென்று இன்ஸ்டாகிராமில் லைவ்-வில் தோன்றி சினிமாவில் பெண்களுக்கு இந்த நிலை பற்றி ஓபன் டாக் கொடுத்துள்ளனர்.

ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வரும் சினிமாவில் பெண்களை என்ன வேணாலும் செய்யலாம் என்ற நோக்கத்தில் கேலிக்கூத்தாக ஏமாற்றி வருகின்றனர்.

ரசிகர்களாகிய நீங்கள் எந்த பிரச்சினையையும் ஒருபக்கம் இருந்தே பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

உதவி இயக்குனர்கள் தன்னை வைத்து படம் பண்ணுவதாக கூறி ஏமாற்றிய கதைகளும் உண்டு. இங்க யாரை நம்புறது, யாரை நம்ப கூடாது என்று தெரியாமலேயே ‘கண்ணை கட்டி காட்டில் விட்டது போல்’ இருக்கிறது என்றும் மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவரைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவும் சினிமாவில் இருக்கும் பெண்களை அவரவர் தாயாக, மகளாக, மனைவியாக, தங்கச்சியாக பார்க்கிற நிலைமை வரவேண்டும் என்று ஆதங்கத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இரு நடிகைகளும் ரசிகர்களின் கமெண்ட் பதிவுகளை படிப்பதை நிறுத்தி விட்டதாகவும், ஏனெனில் நெகட்டிவிட்டியே அதிகமாக இருப்பதால் பாசிட்டிவ் வாழ்க்கையைத் தேடி செல்ல நினைக்கும் எங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள் என்று கெஞ்சுறார்கள்.

இறுதியில் இந்த சினிமா உலகில் பெண்கள் முன்னேறி வருவது ரொம்ப கடினமான விஷயமாக உள்ளது. எந்த சின்ன தப்பு நடந்தாலும் அதுக்கு முழுக்க முழுக்க பெண்கள் தான் காரணம் என்று தீர்ப்பளிக்கும் நிலைமை மாறனும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top