வட சென்னை 2 படத்தில் 15 வயது ராஜனாக நடிக்கும் அசுரன் பட பிரபலம்.. இவரு அந்த நடிகரின் மகனாச்சே!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே வெற்றிதான் எனும் அளவுக்கு அவர்களது ஒவ்வொரு படமும் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றன. கடைசியாக வந்த அசுரன் படம் தேசிய விருது பெற்று பிரமிக்க வைத்தது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வடசென்னை படம் மட்டும் இரண்டு பாகமாக வெளியாகும் என முதல் படம் வெளியாகும்போது அறிவித்தனர்.

ஆனால் அதன் பிறகு வட சென்னை 2 படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இல்லை. மேலும் வட சென்னை 2 படத்திற்கு ஏகப்பட்ட பட்ஜெட் தேவைப்படுவதால் சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே வேறு வேறு படங்களில் பிஸியாகி பணியாற்றத் தொடங்கி விட்டனர்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தாலும் வட சென்னை 2 படம் எப்போது வரும்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கேள்வியாகவும் உள்ளது. அந்த காத்திருப்புக்கு பலனாக தற்போது வட சென்னை 2 படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

வட சென்னை முதல் பாகத்தில் அமீர் சில காட்சிகளே வந்திருந்தாலும் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டது போல அமைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் ராஜன் கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் அதில் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் ராஜனின் காலகட்டங்களும் அதில் இடம்பெற உள்ளது. அதில் சிறுவயது ராஜனாக நடிக்க சமீபத்தில் அசுரன் படத்தின் மூலம் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதை வென்ற கேன் கருணாஸ் என்பவர் நடிக்க உள்ளாராம். இவர் பிரபல காமெடி நடிகர் கருணாஸ் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ken-karunas-cinemapettai
ken-karunas-cinemapettai

அசுரன் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் கவர்ந்ததால் அடுத்த படத்திலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும் வெற்றிமாறன் தற்போது இயக்கிவரும் விடுதலை, அடுத்ததாக இயக்கும் வாடிவாசல் படங்களுக்குப்பிறகு வடசென்னை 2 படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்