India | இந்தியா
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு.. பலி எண்ணிக்கை பார்த்து மிரளும் உலக நாடுகள்
கொரோனா வைரஸ் தாக்கியதால் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த நிறுவனம் டோங்ஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இதற்கான வேக்சினை சீன அரசுடன் கண்டுபிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது எலிகளுக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மருத்துவத்தின் அணுகுமுறையின் படி இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் குரங்குகளுக்கு இது கொடுக்கப்படும்.
அதன் பின் தான் மனிதர்களுக்கு கொடுத்து முழுமையான தீர்வு காண முடியும் என்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளனர். மக்களைக் காப்பாற்ற முடியாமல் சீன அரசு தத்தளித்து வருகிறது. இந்த ஆராய்ச்சியை பல நாடுகளில் நடைபெற்றும் வருகிறது.
இதற்கான மருந்தை கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன் என்று ஜாக்கிசான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வவ்வால் இடமிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கூறியிருந்தனர் ஆனால் எரும்பு தின்னிகளிலிருந்து இந்த வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சீனா மக்களை இந்த வைரஸிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனை சர்வதேச அரசியலில் வைத்து பார்க்கும் போது பயோமெடிக்கல் வார் என்று குறிப்பிடுகின்றன, அதாவது மூன்றாவது உலகப்போர் வைரசை வைத்து அளிக்கப்படுவதுதானம்.
