Connect with us
Cinemapettai

Cinemapettai

இது வேற லெவல் சினிமா.. வாழ் திரை விமர்சனம்!

Reviews | விமர்சனங்கள்

இது வேற லெவல் சினிமா.. வாழ் திரை விமர்சனம்!

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருவி பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய படமே வாழ். கொரானா தொற்று காரணமாக திரை அரங்க ரிலீஸ் ஆகமுடியாமல் போன படம்.  இப்படம் சோனி லிவ் OTT தளத்தில் சமீபத்தில் வெளியானது. இப்படம் திரை அரங்கில் பார்த்திருக்கும் பட்சத்தில் சூப்பர் ஆக இருக்கும் என சினிமா விரும்பிகள் புலம்பி வருகின்றனர்.

ஐடி கம்பெனி வேலை அழுத்தம், வீட்டில் தங்கை காதல், அமெரிக்காவில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்லும் அப்பா, அம்மா என செல்கிறது ஹீரோவின் வாழ்க்கை. மறுபுறம் யாத்ரா என்ற சிறுவன், அவனின் அம்மா (நமது ஹீரோவின் உறவினர்) மற்றும் அப்பா. சின்ன தகராறில் தன் குழந்தையுடன் யாத்ரா நம் ஹீரோவிடம் வருகிறார். தெரிந்த நபருக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என சொல்லி, ஹீரோவை இரண்டு நாள் லீவ் போட்டுவிட்டு வர சொல்கிறாள். பயணம் தொடங்குகிறது.

ஒரு கட்டத்தில் யாத்ரா அம்மா தனது கணவரை கொலை செய்துவிட்டு வந்ததை பற்றி சொல்கிறாள். கார் விபத்து போலீஸ் கைது, வெளிநாட்டு பெண்ணுடன் பப்புவா நியூ கினியா பயணம் என செல்கிறது திரைக்கதை.

vaazhl

இறுதியில் நாளை என்ற நோக்குடன் பயணித்து இன்றைய தினத்தை மக்கள் தொலைத்து விடுகின்றனர் என்ற மேஸேஜை சொல்லியுள்ளனர் இந்த டீம். பயணமும், நாம் சந்திக்கும் மனிதர்களும்; அவர்களின் கதைகளும் நம் வாழ்க்கையை மற்றும் என்ற கோட்பாட்டை சொல்கிறது இந்த வாழ்.

சினிமாபேட்டை அலசல் – கதை சொல்வதற்கு சிம்பிளாக தோன்றினாலும், மேக்கிங்கில் படக்குழு அதீத கவனம் செலுத்தியுள்ளனர். திரை அரங்கத்தில் பார்த்திருக்கும் பட்சத்தில் இப்படத்தின் தாக்கம் நம் மனதில் கூடுதலாக ஒரு உணர்வை விதைத்திருக்கும். முழு திருப்த்தி ஏற்படா விடினும் இப்படம்  பீல் குட் சினிமா தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.75 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top