Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
வாரிசு நடிகை செய்த சில்லரைத்தனம்.. கவலைப்படாத பிரம்மாண்ட இயக்குனர்!
சமீபகாலமாக சினிமா வட்டாரங்களில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பலரும் பல வகைகளில் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரு வாரிசு நடிகை மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வாரிசு நடிகை சமீபகாலமாக தான் பெரிய மகாராணி என்பதைப்போல சினிமா வட்டாரங்களில் நடந்து கொள்கிறாராம். யாரையும் மதிப்பதில்லை, அப்பா வேற ப்ரொடியூசர் மற்றும் இயக்குனர்.
திமிரு காட்டிவந்த நாயகியை அடக்கும் விதமாக சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ட்ரெய்லருக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என நினைத்த நேரத்தில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
அந்த டிரைலரை விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார் அந்த நாயகி. இருந்தாலும் மீசையில் மண் ஒட்டாததைப் போல பிடிக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என சமாளித்து விட்டார்.
அந்த நாயகிக்கு தற்போது இந்தியா முழுவதுமே எதிர்ப்பு இருக்கிறது. அந்த நாயகி தற்போது 350 கோடி பட்ஜெட்டில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதை பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கி வருகிறார் பிரம்மாண்ட இயக்குனர்.
இந்நிலையில் அந்த படத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமா என தயாரிப்பாளர் தரப்பில் அஞ்சுவதாகவும், பேசாமல் நாயகியை மாற்றிவிடலாம் என பிரம்மாண்ட இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அதெல்லாம் செய்ய வேண்டாம் என கூறிவிட்டாராம்.
பிரச்சனை உங்களுக்கு இல்லை, உங்களை நம்பி பணம் போட்ட எங்களுக்குத்தான் என தலையில் அடித்து கொண்டு கிளம்பிவிட்டார்களாம் அந்த தயாரிப்பாளர்கள்.
